மொபைல் போன்களை வெளியிடும் ஃபேஸ்புக்!

Face book
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக மொபைல் போன் வெளியிடுகிறது.
 இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகுமெனத்தெரிகிறது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க்கில் அரங்கமைத்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



சமூக வலைத்தளங்களில் முன்னோடியான ‘ஃபேஸ்புக்’ இதற்கான நிகழ்ச்சியை லண்டன் நகரிலும் நடத்துகிறதாம்.
 தொழில்நுட்ப உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படும் ஃபேஸ்புக் போன் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமாக இந்த நிகழ்ச்சி இருக்குமென தெரிகிறது.
டெக்கிரன்ச் எழுத்தாளர் எம்ஜி சீக்ளர் கூறுகையில் “பல நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின் படி, செவ்வாய்கிழமை அதாவது இன்று ஃபேஸ்புக் போன் பற்றிய தகவல்களை மிகப்பெரிய நிகழ்ச்சி அமைத்து வெளியிடும் எனத்தெரிகிறது. “- என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த புதிய ஃபேஸ்புக் போனானது, ஃபேஸ்புக் இயங்குதளம் கொண்டு செயல்படுமாம். இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்தியோக இயங்குதளம் வடிவமைத்துள்ளது என்றார்.

ஆனால் இந்த வதந்திகளை ஃபேஸ்புக் நிறுவுனர்களில் ஒருவரான மார்க் ஜுகர்பெர்க் மறுத்துள்ளார். இவர் மறுத்ததற்கு வியாபார நோக்கங்கள் காரணமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!

Comments