எமது இணையத்தளத்தில் ஏற்கனவே Photo Editing Software ஆன Adobe Photo Shop CS6 Beta எவ்வாறு தரவிறக்கம் செய்வது தொடர்பாக பதிப்புக்கள் இடம் பெற்றன.இப்போது முந்தைய பதிப்புடன் தொடர்பான பதிப்பு இடம் பெறுகின்றது.இப்பதிப்பு உங்களுக்கு மிகவும் பிரயொசனம் உள்ளதாக அமையட்டும்.
போட்டோக்களை,படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும்,உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் இயல்புகளைச் சரிவாக அமைக்க எண்ணுவோம்.படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம்.படங்களைத் தலைகீழாகவோ,ஒரு கொலாஜ் ஆகவோ,சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப்படுவார்கள்.இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழிகாட்டும்.வகையில் அண்மையில் ஓர் இணையத்தளத்தை காண நேர்ந்தது.அதன் பெயர் இமேஜ் ஸ்பிளிட்டா்.இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://imagessplitter.net/ இந்த தளத்திற்கு சென்றவுடன்.நாம் எந்தப் படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றோமோ,அந்தப் பட பைலை அப்லோட் செய்திட வேண்டும்.பைலின் அளவு 20MBக்கு மிகாமல் இருக்க வேண்டும்.பின்னர்,என்ன வகை செயற்பாட்டை மேற்கொள்ள விரும்புகின்றோமோ,அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால்,உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு டவுன்லோட் செய்திட கிடைக்கும்.இதனை நாம் தேர்தெடுக்கும் டைரக்டரியில் செவ் செய்து பயன் படுத்தலாம்.
இதில் என்ன என்ன வேளைகளை மேற்கொள்ளலாம்?போமட் மாற்றலாம்.jpeg>jpg>bmp>png>gif>ico Mfpaஆகிய போமட்களை கையாளப்படுகின்றன.போமட் மாற்றுவதில் மட்டுமன்றி,படங்களின் அளவுகளை மாற்றுகையிலும்,நெட்டு மற்றும் குறுக்காக படங்களை வெட்டிப் பருவமிலும் கூட உங்களுக்கு எந்த போர்மட்டில் தேவையோ அந்த போர்மட்டில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
படம் ஒன்றை டிசைன் செய்வதற்கு,எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ,அந்த அளவினை தந்தால் போதும்.அளவுகளை தந்த பின் “Resize Image” என்ற பட்டனில் கிளிக் செய்தால்,அந்த அளவிற்கான படம் கிடைக்கும்.இதில்என்ன சிறப்பு எனில்,நீங்கள் அகலத்தை 50 பிக்ஸல் அளவு மாற்றினால்,அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும்.
இந்த தளத்தின் பெயர் படங்களை வெட்டுவது (Image Splitter) என உள்ளது.அதற்கேற்ற வகையில்,நாம் தரும் வரையரைகளின் படி,ஒரு படத்தை செம்மையாக வெட்டி பல பைல்களாக இத்தளம் தருகிறது.பட பைல் ஒன்றை அப்லோட் செய்து விட்டு,எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (Row&colume)என மட்டும் கொடுத்தால் போதும்.உடன் ஒரு சிப் பைலாக தரப்படும்.அதனை விரித்து,பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம்.எடுத்துக்காட்டாக ,4சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால்,2படுக்கை வரிசை 2நெட்டு வரிசை எனத் தர வேண்டும்.4சரியான துண்டுகளாக கிடைக்கும்.இதற்கான பதிலாக,4நெட்டுத் துண்டுகளாக வேண்டுமெனில்,1Row and4Colume எனத் தர வேண்டும்.இதில் என்ன சிறப்பு எனில்,படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படிக் காட்சி அளிக்கும் என முன் தோற்றக் காட்சி காட்டப்படுசின்றது.அதனை பார்த்த பின்னர்,நமக்கு ஓகே என்றால்,வெட்வதற்கு ஓகே சொல்லாம்.
இதே போல படங்களின் அளவினை சரி செய்திடலாம்.மேலே குறிப்பிட்ட வேளைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம்.எந்த புரொகிமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை.எக்கவுன்ட் எதனையும் திறக்க வேண்டியதில்லை.பாஸ்வேட் எதுவும் கிடையாது.போகிற போக்கில் தளம் சென்று,நமக்கு வேண்டிய செயற்பாட்டினை மேற்கொள்ளலாம்.
Comments
Post a Comment