செஸ்: நாதன் ஆனந்த் ஏமாற்றம்

விஜ் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் தொடரில் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். கடைசி சுற்றுப் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது இடம் பிடித்து ஏமாற்றினார். 
நெதர்லாந்தில் உள்ள விஜ் ஆன் ஜீ நகரில்,
75வது டாடா ஸ்டீல் செஸ் தொடர்
நடந்தது. "ஏ' பிரிவில் நேற்று நடந்த கடைசி சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சீனாவின் ஹயோ வாங்கை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 49வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதிய போட்டி 66வது நகர்த்தலின் போது "டிரா' ஆனது.
இதையடுத்து, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (8 புள்ளி) மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் செர்ஜியுடன் (8) பகிர்ந்து கொண்டார். மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா (6.5) ஏழாவது இடம் பிடித்தார். 
கார்ல்சன் சாம்பியன்:
நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனீஸ் கிரி மோதிய கடைசி சுற்று போட்டி "டிரா' ஆனது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த கார்ல்சன் (10) சாம்பியன் பட்டம் வென்றார். ஆர்மினியாவின் ஆரோனியன் (8.5) இரண்டாவது இடம் பிடித்தார்.

Comments