எக்ஸல் வேர்ஸ் ஷீட்டீல் மேலாக டேட்டாக்களின் தன்னையைக்காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம்.பலவகையான செல்களுக்கும் பொதுவாக நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும்.சில இந்த வசதி பெற,செல்களின் முன் ஸ்பேஸ் பாரை அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்
வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள்.அதற்கு எக்ஸல் செல்களை இணைக்கும் வழியைத் தருகின்றது.இதனை மேற்கொண்டால் ஒன்றுக்கு மேற்பட்ட செல்களை இணைத்து அவற்றிக்கு தலைப்புக் கொடுத்து,ஓரமாகவோ நடுவிலோ அதனை அமைப்பது எளிதாகின்றது.
இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்கலாம்.முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்தெடுக்கவும்.
இரண்டாவதாக போர்மட்டிங் டோல் பார்க்கு(Formatting Toolbar) செல்லவும்.இங்கே Merge and Center என்ற பட்டனை கிளிக் செய்திடவும்.இப்போது நீங்கள் தேர்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும் இதில் நீங்கள் என்ன டைட்டில் வேணுமென்றாலும் டைப் செய்து கொள்ளலாம்.மிகச் சரியாக எவ்வித எக்ஸ்றா ஸ்பேஸ்சும் ஏதும் இல்லாமல் டைட்டில் உங்கள் டெட்டாக்களுக்கு மேலாக நடுவில் அப்படியோ என்று அமர்ந்து விடும்.நீங்கள் இன்ணொன்றும் எதிர்பார்பது தெரிகின்றது! இப்படி இனணத்ததை வேண்டாம் எனக்கருதி மீண்டும் செல்லாக வேண்டுமென்றால் என்ன செய்வது?சிலர் இந்தக்கேள்விக்கு பதிலாக Match and Center Buttonஐ மீண்டும் கிளிக் செய்து பார்திருப்பார்கள்.ஆனால் அது எதிர்பார்தத பணியை செய்திருக்காது.ஏனென்றால் இந்தப்பிரச்சினைக்கு அது வழியல்ல.அப்படியானால் செல்களை பிரித்து பழைய நிலைக்கு கொண்டுவர எண்ணுகின்றீர்களா?அவற்றை தேர்தெடுக்கவும்.பின் Formet Cells விண்டொவைத் திறக்கவும்.இதற்கு Formet Menu சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக.அல்லது Ctrl+1 என்ற இரண்டு கீகளை அமுத்திடுக.இப்போது கிடைக்கும் விண்டொவில் Alignment டேப்பை திறக்கவும்.இதில் Merge Cells என்ற பிரிவுக்கு முன்னால் அடையாளத்தைக் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும்.இப்போது ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் தனித்தனியே பிரிக்கப்பட்டு கிடைக்கும்.
Comments
Post a Comment