கணினியின் இணைய இணைப்பு வேகம் 20%. கூடுதலாக ஆக்கிட


என்னதான் அதிவேக இணைய இணைப்பு ,அகல் கற்றை இணைய இணைப்பு என நம்மிடம் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் கோப்புகளை பதிவேற்றம் செய்யும்போதும் பதிவிறக்கம் செய்யும்போதும்    இணைப்பு வேகமானமானது படிப்படியாக குறைந்து கொண்டே வந்து நத்தை வேகத்திலும் அல்லது ஆமைவேகத்திலும் செயல்படும்
அதனால் நமக்கு ஏராளமான எரிச்சலும் செல்லா கோபமும் வந்து அலைக்கழிக்கும் இவ்வாறான நேரங்களில் கூடுதலாக செலவுசெய்து எங்களுடைய மென்பொருளை வாங்கி நிறுவி பயன்படுத்தினால் உங்களுடைய கணினியின் இணைய இணைப்பு வேகமானது ராக்கெட் வேகத்தில் செல்லும் என எறியும் நெருப்பில் நெய்ஊற்றுவது போன்று  தம்முடைய விளம்பரத்தின் மூலம் ஒரு சிலநிறுவனங்கள் நமக்கு கூடுதலான எரிச்சலை ஏற்படுத்துவார்கள்  அவ்வாறான கூடுதலான செலவேதுமில்லாமல் உங்களுடைய பையிலிருந்து கூடுதலாக ஒரு ரூபாய் கூட செலவழிக்காமலேயே உங்களுடைய கணினியின் இணைய இணைப்பு வேகத்தை 20 % உயர்த்தி கொள்ளமுடியும்   இது  எவ்வாறு முடியும் என இப்போது காண்போம்.
விண்டோ இயக்கமுறைமை நிறுவியுள்ள  எந்தவொரு கணினியும் இணைய இணைப்பு பெறும்போது  இந்த இயக்கமுறைமையினை அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்ளவும்  கணினியின் இயக்கத்தை  ஒருங்கிணைத்திடவும் என 20% இணைப்பு வேகத்தை விண்டோவானது தனக்கென யாருடைய அனுமதியும் இல்லாமல்  தானாகவே ஒதுக்கி கொள்ளும் மிகுதி 80 % மட்டுமே நாம் பயன்படுத்து வதற்காக  வழங்கபடுகின்றது அதனால்தான் நம்முடைய கணினியின் இணைப்பு வேகமானது மெதுவாக உள்ளது என்ற தகவலை  அறிந்து கொள்க இதனை தவிர்க்க start => run=> என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் விரியும்  run என்ற உரையாடல் பெட்டியில்  gpedit.msc என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையைஅழுத்துக
2.1
2.1
உடன் விரியும் Local Group Policy Editor  என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்தில்  Local Computer Policy=>Computer Configuration=>Administrative Templetes=> Network=> QoS Packet Scheduler=> என்ற வாறு  கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் விரியும்  QoS Packet Scheduler என்ற  பலகத்தில்  Limit Reservable Bandwidth. என்ற கட்டளையை தெரிவு செய்து இருமுறை சொடுக்குக
பின்னர் Limit Reservable Bandwidth. என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் enabled என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க அதன் பின்னர்options என்பதன்கீழுள்ள bandwith limit (%) என்ற உரை பெட்டியில்  20%. என்றிருக்கும் மதிப்பை 0 என மாற்றியமைத்தபின்  apply,  ok ஆகிய இரு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் உங்களுடைய கணினியின் இணைய இணைப்பு வேகம்   20%. கூடுதலாக இருப்பதை காணலாம்
2.2

Comments