முன்னாள் முஸ்லிம் எதிர்ப்பாளரும் முன்னாள் தீவிர வலது சாரி அரசியல்வாதியுமான டென்மார்க் நாட்டை சேர்ந்த அர்நூத் வான் தோர்ன் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார். இவரது கட்சியே சில காலத்துக்கு முன் நபிகள் நாயகம் மீது அவதூறான திரைப்படம் ஒன்றை உலகளாவிய ரீதியில் தயாரித்து வெளியிட்டிருந்தது. அண்மையில் இவர் மதீனா நகரின் மஸ்ஜித் உன் நபவிக்கு விஜயம் செய்து தொழுகைகளை நிறைவேற்றியதுடன்
குறித்த திரைப்படம் தொடர்பாக மன்னிப்புக் கோரினார்.இந்த திரைப்படத்தை தயாரித்த கட்சி தலைவர்களில் தோர்ன் உம் அடங்கியிருந்தார். எனினும் இஸ்லாம் மற்றும் இறைத்தூதர் பற்றிய விரிவான கற்கைகளின் மூலம் கடந்த மாதம் இவர் இஸ்லாத்தை தழுவியிருந்தார். குறித்த திரைப்படத்துக்கு உலகளாவிய ரீதியில் கிளம்பிய எதிர்ப்பு இறைத்தூதர் பற்றி அறிந்து கொள்ள தன்னை தூண்டியதாகவும் இதேவே தனது மத மாற்றத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறினார்.
மஸ்ஜிதுன் நபவியின் இமாம்களான ஷேய்க் அலி அல் ஹுதைபி மற்றும் ஷேய்க் சலாஹ் அல் பதர் ஆகிய இருவரையும் சந்தித்து நல்ல முஸ்லிமாக வாழ்வை முன்னெடுத்தல் மற்றும் மேற்குலகில் இஸ்லாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுத்தல் என்பன பற்றிய உபதேசங்களை பெற்ற பின்னர் புந்த உம்ரா கடமையை நிறைவேற்ற மக்க மா நகருக்கு பயணமாகியுள்ளார்.
டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினரும் ஹேய்க் நகர கவுன்சில் உறுப்பினருமான இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விடயத்தை தனது டுவிட்டர் மூலம் அறிவித்ததோடு ட்விட்டரில் “அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் யாரும் இல்லை முஹம்மத் இறைவனின் தூதர் என அரபி மொழியில் எழுதி இருந்தார்.
ஆரம்பத்தில் இவரின் இந்த ட்விட்டர் சேதியை அநேகமானோர் நம்ப மறுத்ததோடு இவர் நகைச்சுவையாக விளையாடுகிறார் என எண்ணினர். இவரின் கடந்த கால நடவடிக்கைகளை பார்க்கும்போது இவ்வாறு எண்ணுவது இயல்பானதே. எனினும் தோர்ன் நகர மேயருக்கு உத்தியோகபூர்வ கடிதம் மூலம் உறுதி செய்தார். மிக அண்மையில் இவர் நகர கவுன்சில் மேயருக்கு வேலை நாட்களில் தொழுகைகளுக்கு தனக்கு நேரம் வழங்குமாறு உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இது ஒரு பெரிய முடிவாகும், இந்த முடிவு இலகுவாக எட்டப்படவில்லை. கடந்த ஒரு வருட காலமாக நான் குர்ஆன், ஹதீஸ், சுன்னா மற்றும் ஏனைய விடயங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தேன் என்பதை எனக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள் என தோர்ன் கூறினார். அத்துடன் அவர் முஸ்லிம்களுடன் இஸ்லாம் பற்றி நிறைய உரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
தனது கட்சியின் இஸ்லாமிய விரோத போக்கு இஸ்லாம் பற்றி ஆராய தன்னை தூண்டியதாகவும் அவர் கூறினார். இஸ்லாம் பற்றி எதிர்மறையான பல விடயங்களை நான் கேட்டுள்ளேன் எனினும் என்னைப்பொறுத்த வரை அடுத்தவர்களின் கூற்றுக்களை எனது சொந்த ஆராய்ச்சி இன்றி நான் நம்புவதில்லை. எனவே நான் இஸ்லாம் பற்றிய எனது அறிவை ஆழமாக்க ஆரம்பித்தேன்.
இஸ்லாத்தை தழுவிய பின் வில்டர் கட்சியில் இருந்து விலகி ஹேக் நகர கவுன்சிலில் ஒரு சுயாதீன உறுப்பினராக நீடித்து வருகிறான் 46 வயது நிரம்பிய தோர்ன். “சில நபர்களை பொறுத்த வரை நான் ஒரு துரோகி, எனினும் அநேகமான மற்ற மனிதர்களின் கருத்துப்படி நான் மிக சிறந்த முடிவு ஒன்றையே எடுத்துள்ளேன் என தோர்ன் அல் ஜசீரா வுக்கு தெரிவித்துள்ளார். இந்த முடிவின் ட்விட்டர் பின்னூட்டல்கள் சிறப்பாக இருப்பதாகவும் கூறினார். தன்னுடன் நேரடி அறிமுகம் இல்லாதவர்களும் எனது சூழ்நிலையை விளங்கி எனது தெரிவை ஆதரிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
வில்டர் கட்சியில் இணைந்தது பற்றி தற்போது வருத்தப்படுகிறீர்களா என வினவப்பட்ட போது “வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டது, எனினும் எனக்கு தற்போது உள்ள அறிவு அக்கால கட்டத்தில் எனக்கு இருந்திருப்பின் நிச்சயமாக நான் வேறொரு தெரிவை மேற்கொண்டிருப்பேன்” என கூறினார்.
இந்த அரசியல்வாதியை பொறுத்த வரை இஸ்லாத்தில் இணைந்தது அவரை வாழ்வின் நேரான பாதைக்கு இட்டுச்சென்றுள்ளது. “நான் ஏனையவர்களைப்போல் வாழ்வில் அதிக தவறுகள் செய்துள்ளேன், எனினும் இந்த தவறுகளின் ஊடாக அதிக பாடங்களையும் கற்றுள்ளேன் என அவர் கூறினார். இந்த மாற்றத்தின் மூலம் எனது பாதையை நான் கண்டுவிட்டதாக உணர்கிறேன். இதை ஒரு புதிய ஆரம்பமாக உணர்வதோடு நான் இன்னும் இது பற்றி அதிகம் கற்க வேண்டியுள்ளது என உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment