இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் மின்சாரம் துண்டிக்கப்டும் சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கென SOS Charger அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எளிமையான முறையில் மின்சாரத்தை
உற்பத்தி செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த நவீன சாதனமானது 1500mAh மின்னோட்டத்தினை வெளிவிடுவதோடு 3 தொடக்கம் 5 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்த பின்னர் 5 தொடக்கம் 12 நிமிடங்கள் வரை அழைப்புக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு மின்னை உற்பத்தி செய்கின்றது.மேலும் இச்சாதனத்தையும் கைப்பேசியையும் இணைப்பதற்காக USB இணைப்பி காணப்படுகின்றதுடன் சார்ஜ் செய்யப்படும் அளவுகளை அறிந்து கொள்வதற்கொன LED மின்குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இச்சாதனத்தின் பெறுமதியானது 35 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment