நாம் கண்களால் பார்ப்பது காதுகளால் கேட்பது ஆகிய செயல்களின் மின்தூண்டல் நிகழ்வு மூளைக்கு எடுத்துசெல்லப்படுகின்றது அங்கு உடனடியாக அதற்கு தகுந்த பதில் செயலை செய்யும்படி மூளையானது உத்திரவிடுகின்றது, உடன் அதற்கேற்றவாறு நம்முடைய உடல் இயங்குகிறது,
அவ்வாறே விசைப்பலகை,சுட்டி, தொடுபலகை போன்றவற்றால் பெறப்படும் தகவல்ளை செயலி(Processor) ஆனது பெற்று செயற்படுத்தி தகுந்த வெளியீட்டு சாதனங்களின்(கணினிதிரை,,அச்சுப்பொறி) மூலம் வெளியிடுகின்றது, அதனால் இந்த செயலி(Processor)யை நம்முடைய மூளைக்கு நிகராக ஒப்பீடு செய்யலாம்இதனை மத்தியசெயலகம் என பெரும்பாலும் அழைப்பர் இது தாய்ப்பலகையுடன் உறையால்(jacket) இணைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது,
இந்த செயலி(Processor) 1970 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகமாகி வளர்ந்து வருகின்றது, ஒவ்வொரு இரண்டு நபர்களில் ஒருவராவது இண்டெல் செயலி( intel Processor)/யைபற்றி கண்டிப்பாக அறிந்தவராக இருப்பார் என ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது, ,கணினியுடன் இந்த இண்டெல் நிறுவனம் அந்தளவிற்கு ஒட்டி உறவாடி வருகின்றது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்,ஒற்றை உள்ளகம் (single core)செயலி(Processor) அடுத்தாக இரட்டைஉள்ளகம்(dual core) செயலி(Processor) இபபோது நான்குஉள்ளகம்(quad core) செயலி(Processor) ஆக வளர்ந்து உள்ளது இரட்டை மற்றும் நான்கு உள்ளகசெயலி(Processor)கள் தற்போது சாதாரண மக்களால் வாங்கமுடியாதவாறு விலைநிலவரம் விண்ணைமுட்டும் அளவிற்கு இருந்தாலும் அனைவரும் வாங்ககூடிய நிலை விரைவில் ஏற்படும்
இந்த செயலி(Processor) பற்றி பின்வரும் சொற்களுக்கு முதலில் விளக்கத்தை தெரிந்து கொள்வது நல்லது,
1,இடைமாற்றகம்(cache):மத்தியசெயலகத்தில் அடிக்கடி அனுகும் தரவுகளின் உடனடி மேற்கோள் செய்வதற்கான தற்காலிகமாக தேக்கிவைக்கும் இடமே இடைமாற்றகம்(cache) என அழைப்பர்,
இதில் தரவுகள் நிரந்தர நிணைவகமான வன்தட்டிலிருந்து பெற்று தற்காலிகமாக தேவையான அளவிற்கு சேகரித்து தேக்கிவைத்திருக்கும் கணக்கீடுசெய்வதற்கு தேவையான தரவுகளை பெறுவதற்கு நிரந்தர நினைவகத்தை அடிக்கடி அனுகுவதால் ஏற்படும் காலஇழப்பினை தவிர்த்து மிகத்திறனுடன் கணிப்பொறி செயல்பட இது உதவுகிறது,
நிலை1இடைமாற்றகம்(L1 cache):இதனை நிலை1 இடைமாற்றக(Level 1 cache) நினைவகம் என்ற மிகச்சிறந்த நினைவகமாகும்,இது மத்தியசெயலகத்திற்கு உள்ளேயே முன்கூட்டியே கட்டப்பட்டுள்ளது இது நிலை 2 ஐ விட மிக வேகமாக செயல்படக்கூடியதுஇது அடிக்கடி பயன்படுத்துவதற்கான தரவுகளை சேகரித்து தேக்கிவைத்துள்ளது,
நிலை2இடைமாற்றகம்(L2 cache): இது மத்தியசெயகத்திற்குவெளியே அமைந்துள்ளது,நிலை 1ஐ போன்றே இந்த நிலை 2 உம் செயல்படக்கூடியது ஆகும்,ஆனால் இது அதைவிட மிக மெதுவாக இயங்குகின்றது,அதிகஅளவு தேக்கும் திறனை கொண்டது,
மின்பாட்டை(Bus):இது இருபுறமும் தகவல்களை கடத்தும் திறன் அதாவது தரவுகளை பெறுவது மற்றும் வழங்குவது ஆகிய இருசெயல்களையும் ஒரேசமயத்தில் செய்யும் திறன்கொண்டது,இது கணினியின் ஒரு உறுப்பிலிருந்து மற்றொரு உறுப்பிற்கு தரவுகளை கடத்தும் சாதணமாக பயன்படுத்தப்படுகின்றது வழிநடத்துபவர்(Router) அல்லது கட்டுப்பாட்டாளர்(controller) துணையுடன் விரிவாக்க அட்டை போன்றவைகளை கட்டுபடுத்துகின்றது,
FSB :தாய்ப்பலகையிலிருக்கும் சில்லைதொகுதி,செயலி ,முதன்மை நினைவகம் ஆகிய மிகமுக்கிய மூன்று உறுப்புகளும் எப்போதும் கணினியின் மற்று உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவாறு உள்ளது இந்த முறைமை மின்பாட்டை பஸ் எனப்படும்FSB ஆனது மின்னனு தகவல்களை செயலிக்கும் தாய்ப்பலகைக்கும் இடையே தகவல்களை கடத்த உதவுகின்றது,மிக வேகமான FSB உடன்இருக்கும்போது தாய்ப்பலகையில் உள்ள சில்லிதொகுதியும் மிக வேகமாக செயல்படுகின்றது¢ஆனால்வேகமான செயல்பாட்டிற்கு FSBமட்டும் பொறுப்பன்று இதுவும் ஒரு காரணியாகும்
Clock speed:மத்தியசெயலகமானது எவ்வளவு நேரத்தில் ஒருமுழு சுழற்சி யினடிப்படையில் ஒரு செயல் நடைபெறுகின்றது என்பதே Clock speedஆகும்,இதனை மெகாஹெர்ட்ஸால் அளவிடப்படுகின்றது, 3.2 Ghz என்றால் ஒருநொடிப்பொழுதில் 32¢ மில்லியன் சுழற்சி சுழன்று முடிந்துவிடுகின்றது எனப்பொருள்படும்
ஆயினும் ஒவ்வொரு குழுவிலுமுள்ள ஒரேமாதிரியான வேகமுடைய இரண்டு மத்தியசெயலகங்களின் செயல் திறன் ஒரேஅளவாக இருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள,ஆனாலும் இந்த கிளாக் ஸ்பீடானது கணினியின் இயக்கத்திறனை அறிய உதவும் அளவுகோளாக செயல்படுகின்றது,
Dual core processor:ஒரே அச்சில் வெவ்வேறான இரண்டு உள்ளகங்கள் தனித்தனி இடைமாற்றக நினைவகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, தாய்ப்பலகை இவ்விரண்டையும் தனித்தன்மையுடனேயே அங்கீகரிக்கின்றது, இயக்கமுறைம்யும் இவைகளை தனித்தனியாகவே போதுமான அளவிற்கு எடுத்துகொண்டுசெயல்படுகின்றது,
Multi threading :ஒரு பெரிய நிரல்தொடரை சிறுசிறு பகுதியாக தனித்தனியே பிரித்து இவைகளுக்குள் ஒன்றுக்கொன்று குழப்பமேதுமில்லாமல் செயல்பட்டு இறுதிவிளைவை அடைய உதவுவதே மல்ட்டிதிரட்டிங் என அழைப்பர்,
செயலி ஒற்றை உள்ளகமக இருக்கும்போது செயல்திறனை அதிகபடுத்திட கிளாக்ஸ்பீடைமட்டும் அதிகபடுத்திகொண்டேவந்தார்கள் ஒருகுறிப்பிட்ட அளவிற்குமேல் இந்த கிளாக்ஸ்பீடை அதிகபடுத்தமுடியாது அவ்வாறு அதிகபடுத்தியதால் ஏற்பட்ட அதிவேக இயக்கத்தினால் அதிக வெப்பம் ,செயலிழப்பு குறுகிய வாழ்நாள் ஆகியவிளைவுகள் ஏற்பட்டு திறன் ஏதும் கூட்டமுடியாத தேக்கநிலை ஏற்பட்டுவிட்டது
இவ்வாறான தேக்கநிலையிலிருந்து மீளும்பொருட்டும் மாற்றுவழியை கண்டறியவேண்டிய கட்டாய சூழலில் இரண்டு மற்றும் அதற்குமேற்பட்ட பலஉள்ளகங்களை ஒரேஅச்சின் சில்லுக்குள் அமைத்து செயல்படுத்தும் வழிமுறையை கண்டுபிடித்தனர்,இவ்வாற பலஉள்ளகங்களை ஒரே சில்லுக்குள் அமைத்தால் செயலி இயங்கும்போது அதிகஅளவிற்கு வெப்பமும் ஏற்படாது செயல்திறன் கூடுவதற்கும் மின்சாரநுகர்வு குறைந்து பேட்டரியின் வாழ்நாள் உயர்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது,
அதனால் இன்று ஒற்றை உள்ளகம் அனேகமான மறைந்து வழக்கொழிந்தே போய்விட்டது,தற்போது இரட்டை உள்ளகம் மற்றும் இரண்டிற்கும் மேற்பட்ட பலஉள்ளகங்களே செயல்பாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் கிடைக்குமாறு வெளியிடப்பட்டுவருகின்ற ன,
ஒரே தாய்ப்பலகையின் ஒற்றை சில்லுக்குள் பலமத்தியசெயலகத்தின் உறைகளுடன் சிறிய பல உள்ளக செயலிகளை அமைத்துபொருத்துவதற்கு ஏற்றவாறு விரைவில் வரஇருக்கின்றது
Comments
Post a Comment