கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது.
USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின் மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இதற்காக குறித்த சுட்டியுடன் தரப்பட்டுள்ள ஸ்கான் செய்வதற்கான பொத்தானை அழுத்தியதும் சுட்டி காணப்படும் மேற்பரப்பிலுள்ள எழுத்துக்கள் ஸ்கான் செய்யப்படும்.
இந் நவீன ரக சுட்டிகளை 79 அமெரிக்க டொலர் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.
Comments
Post a Comment