மின்னல் வேகம்: 2020 இல் Internet!

செக்கனுக்குள் முழுத்திரைப்படத்தையே தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக செம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் அறிவித்துள்ளது.
இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.
எனினும் 2020 ஆம் ஆண்டளவிலேயே இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமென தெரிகின்றது. தற்போது பரீட்சாத்த அளவிலேயே இது உள்ளது.

இதன் மூலமாக முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் தெரிவிக்கின்றது. இத்தொழில்நுட்பத்தில் தரவுகள் தடையின்றி தூரத்திற்கு பயணிப்பதாக செம்சுங் சுட்டிக்காட்டுகின்றது.
தற்போது பாவனையில் உள்ள 4ஜி வலையமைப்பை விட 5ஜி பல மடங்கு வேகமானதாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 4ஜி தொழில்நுட்பம் பாவனையில் உள்ளது. குறிப்பாக தென் கொரியாவில் சுமார் 20 மில்லியன் 4ஜி பாவனையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments