எமது கணினியில்
உள்ள Drive களில் உள்ள FILE களை மற்றவர்கள் பார்கமுடியாதவாறு DRIVE வையே மறைத்து வைக்கலாம்.
ஒன்றும் யோசிக்கத்தேவையில்லை. இப்படி செய்து பாருங்கள் இலகுவாக மறைக்கலாம்.
படிமுறைகள்
1.ஸ்டார்ட் (START) பட்டனை கிளிக் செய்து ரன் (RUN) என்பதை தெரிவு செய்யவும்.
2.இப்பொழுது ரன்
பாக்ஸ் உங்கள் கணினித்திரையில் தோன்றும் அதில் CMD
என டைப் செய்யுங்கள்.
3.COMMAND
PROMPT யிற்கு வந்த பிறகு அதில் DISK PART என டைப்
செய்யுங்கள்
4.பின்பு LIST VOLUME என டைப் செய்யுங்கள்
5.இப்பொழுது கணினியில் உள்ள அனைத்துத் தகவல்களும்
வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்கத்தேவையில்லை. அடுத்து நீங்கள் எந்த டிரைவை மறைக்க
விரும்புகின்றீர்களோ அதனை கீழ் வரும் உதாரணத்தின் படி டைப் செய்யுங்கள். உதாரணமாக டிரைவ்
D யை மறைப்பதாயின் SELECT VOLUME D
6.இப்பொழுது இதன்
கீழ் VOLUME 2 IS THE SELECTED VOLUME என்று வரும். இப்பொழுது REMOVE LETTER D என டைப் செய்யுங்கள். பின்னர் உங்கள் கணினியை
ரீ ஸ்டார்ட் செய்யுங்கள் இப்பொழுது டிரைவ் D மறைந்திருக்கும்.
மறைந்த டிரைவை
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமெனில் மேற்க்கூரப்பட்ட படிமுறைகள் 5 வரை செய்து
அதில் REMOVE LETTER D யிற்கு பதிலாக ASSIGN LETTER D என
டைப் செய்யுங்கள். பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள் இப்பொழுது மறைந்த டிரைவ்
D மீண்டும் தோன்றி இருக்கும்.
குறிப்பு : இவ்வாறு
உங்கள் டிரைவை மறைத்து மீண்டும் தோன்றச்செய்வதால் உங்கள் டிரைவில் உள்ள பைல்
(FILE) எந்த பாதிப்பும் ஏற்படாது.
நன்றி - கம்ப்யூட்டர் ருடே சஞ்சிகை
Comments
Post a Comment