மென்பொருளின் பெயரை வைத்தே நீங்கள் இது எப்படிப்பட்ட
மென்பொருள் என அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். எவ்வாறெனில் இம்மென்பொருளின்
பெயர் போட்டோ (PHOTO) என்று ஆரம்பிக்கின்றது. ஆகவே இது போட்டோக்களை வைத்து மாயாஜாலம்
செய்யும் ஒரு மென்பொருளாக இருக்கும் என்ற்தானே நினைக்கின்றீர்கள்..? ஆம் அதுதான் உண்மை.
இனி விரிவாக இதனை நோக்குவோம். போட்டோ ஸ்கேப் மென்பொருளானது முற்றிலும் இலவசமாக இணையத்தளத்தில்
பெறக்கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் அளவு வெறும் 16.5MB யே ஆகும். மற்றைய போட்டோ எடிட்
(PHOTO EDIT) மென்பொருட்களை விட போட்டோ ஸ்கேப் ஆனது தன்னகத்தே அதிக வசதிகளை கொண்டமைந்துள்ளது.
அதாவது சில மென்பொருட்கள் போட்டோக்களுக்கு போர்டர் (BORDER) இடுவதாயின் அவ்வசதியை மாத்திரமே கொண்டமைந்திருக்கும். இன்னும் சில மென்பொருட்கள் போட்டோக்களை அனிமேசன் கோப்பாக (ANIMATION FILE) மாற்றுவதாயின் அவ்வசதியை மாத்திரமே கொண்டமைந்திருக்கும். ஆனால் அப்படிப்பட்ட மென்பொருள் அல்ல இந்த போட்டோ ஸ்கேப். அவற்றிற்கு மாறக போட்டோக்களை எடிட் (EDIT) செய்வதற்கு 6 வகையான தலைப்புக்களை கொண்டு காணப்படுகின்றது. அத்தலைப்புக்களாவன..
1.Editor 2.Batch Editor 3.Page
4.Combine 5.Animated GIF 6.Print போன்றவை
ஆகும். இவற்றின் மூலம் போட்டோக்களை விரும்பியவாரு மாற்றத்திற்குட்படுத்தலாம். அதாவது
போட்டோக்களுக்கு போர்டர் இடுதல் , அனிமேசன்னாக (ANIMATION) மாற்றுதல் , போட்டோக்கள்
அனைத்தையும் ஒன்றினைத்தல் , எஃபக்ட் (EFECT) வழங்குதல் , பிரிண்ட் (PRINT) செய்தல்
மட்டுமல்லாமல் இன்னும் பல வசதிகளை கொண்டமைந்துள்ளது. இம் மென்பொருள் மூலம் திருமண வைபவத்தின்
போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சுற்றுலாப் பயணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள்
மற்றும் பல போட்டோக்களை விரும்பியவாறு அமைத்துக்கொள்ளலாம். நீங்களும் இம்மென்பொருளை
இலவசமாக தரவிறக்கி (DOWNLOAD) உங்கள் போட்டோக்களையும் உள்ளிட்டு எடிட் (EDIT) செய்து
பாருங்கள். அசந்து போவீர்கள்.
ஆக்கம் : மு.மிப்றாஸ்
குறிப்பு : இம்மென்பொருளை நீங்கள்
எமது இணையத்தளத்திலேயே இலவசமாக டவுன்லோட் செய்யுங்கள்
Comments
Post a Comment