இந்த Hangouts வசதியை ஐந்து வழிகளில் பயன்படுத்தலாம்.
ஜிமெயில் சாட்
கூகுள் ப்ளஸ் சாட்
க்ரோம் நீட்சி (extension)
ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் (முன்பு Google Talk)
ஐஓஎஸ் அப்ளிகேசன்
இதில் ஜிமெயிலில் மட்டும் இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் இப்போதே ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.
ஜிமெயில் சாட் பாக்ஸில் தெரியும் உங்கள் படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் காட்டும். அதில் Try, the new hangouts என்பதை க்ளிக் செய்தால் போதும். புதிய சாட் பாக்ஸை பயன்படுத்தலாம்.
Hangouts வசதிகள்:
சாட்டில் படங்களையும், அட்டகாசமான புதிய உணர்சித்திரங்களையும் (Emoticons) அனுப்பலாம். பத்து நபர்கள் வரை க்ரூப் சாட் மற்றும் க்ரூப் வீடியோ சாட் செய்யலாம். கணினியில் சாட் செய்ய தொடங்கி பிறகு ஆண்ட்ராய்ட், ஆப்பிள் சாதனங்களில் சாட்டிங்கை தொடரலாம். இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் நான் எப்போதும் பயன்படுத்தும் வசதி இல்லை. Hangouts-ல் invisible வசதி கிடையாது. இதில் எஸ்எம்எஸ் வசதியும் விரைவில் வரவிருக்கிறது.
Comments
Post a Comment