இன்று, நேற்றல்ல அப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உயிரிழப்பதற்கு
முன்னரே குறைந்த விலையில் ஐபோன் தொடர்பில் தகவல் கசிந்திருந்தது.எனினும்
ஸ்டீவ் அதனை கடுமையாக எதிர்த்திருந்தார், குறைந்த விலை ஐபோன் என்ற
பேச்சுக்கே இடமில்லையென அவர் தெரிவித்திருந்தார். அவர்
உயிரிழந்து பல
மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் குறைந்த விலை ஐபோன் தொடர்பிலான
பேச்சுக்கள் அடிபடத்தொடங்கியுள்ளன.
இணையத்தில் குறைந்த விலை ஐபோனினுடையது எனக் கூறப்படும் படங்கள் கடந்த
சில நாட்களாக வெளியாகி வருகின்றன.தற்போது வெளியாகியுள்ள சில படங்கள்
குறைந்த விலை ஐபோனினுடையது என அடித்துக் கூறப்படுகின்றது.
இந்நிலையில்
செம்சுங்கின் கெலக்ஸி நோட் 3 பெப்லட் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெலக்ஸி நோட் 3 ஆனது 5.7 அங்குல சுப்பர் எமொலெட் திரை, 3 ஜி.பி. ரெம்,
13 மெகாபிக்ஸல் ஆகியவற்றையும் கொண்டிருக்குமெனவும்
எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கெலக்ஸி நோட் 3னுடையது எனக் கூறப்படும்
படமொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment