செல்பேசி சந்தையில் முதலிடத்தை பிடிக்க நோக்கியா அறிமுகப்படுத்தும் Lumia 1020!

ஸ்மார்ட் போன்கள் எனும் போது செம்சுங், அப்பிள், எச்.டி.சி தொடர்பான பெயர்களே அதிகமாக பேசப்படுபவையாக உள்ளன. ஆனாலும் நொக்கியா போன்ற சில நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் சந்தையில் தம்மை நிலைநாட்டிக்கொள்ளும் பொருட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நொக்கியா 41 மெகாபிக்ஸலுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இப் புதிய ஸ்மார்ட் போன் கெமராவின் மூலம் இதுவரை சாத்தியப்படாத அளவு துள்ளியமான படங்களை எடுக்க முடியுமென நொக்கியா தெரிவிக்கின்றது.எனினும் இதேபோன்று கடந்த வருடமும் பியோர்விவ் 808 என்ற 41 மெகாபிக்ஸல் சென்சருடன் கூடிய கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா வெளியிட்டிருந்தது. ஆனால் அது எதிர்ப்பார்த்த வரவேற்பைப் பெற்றதாக என்பது சந்தேகம்.
இந்நிலையில் தற்போது 41 மெகாபிக்ஸல் கெமராவுடன் கூடிய ஸ்மார்ட் போனை நொக்கியா அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் மூலம் இயங்கும் குறித்த ஸ்மார்ட் போனானது லுமியா வரிசையைச் சேர்ந்தது. இது Lumia 1020 எனப் பெயரிடப்பட்டுள்ளது.நொக்கியாவும், மைக்ரோசொப்டின் விண்டோஸுடன் இணைந்து தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஸ்மார்ட் போன் போரில் வெற்றிகொள்ளவே முயற்சிக்கின்றது.
அதன் ஒரு அங்கமாகவே துள்ளியமான கெமராவுடன் கூடிய லுமியா 1020 வை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்மார்ட் போன்களை பொருத்தவரையில் அதிகமான பாவனையாளர்கள் அதில் கெமராவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகக் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே லுமியா 1020 சந்தையில் எவ்வளவு தூரத்துக்கு வரவேற்பைப் பெறப்போகின்றது என்பதனை சற்று பொருத்திருந்து பார்ப்போம்.

Comments