வின்டோஸ், லினிக்ஸ் மற்றும் மக் ஆகிய மூன்று இயங்குதளங்களுக்கும்
கிடைக்கின்ற இலவச ஏவிஜி அன்ரிவைரஸ் மென்பொருள், தரவிறக்குவதிலும்
பயன்படுத்துவதிலும் மிக மிக இலகுவானதொன்றாகும். இதன் காரணமாய் ஏராளமானோர்
இதனை பயன்படுத்துகின்றனர். ஐந்தே நிமிடத்தில் இம்மென்பொருளை பயன்படுத்தி
உங்கள் கணினியை வைரஸ்களிலிருந்தும் மல்வெயர்களிலிருந்தும்
பாதுகாத்துக்கொள்ளலாம்.
இந்த மென்பொருள் வின்டோஸ் மற்றும் மக் இயங்குதளங்களுக்கு கிடைக்கின்றது.
உங்கள் கணினியிலுள்ள வைரஸ்களை கண்டறிவதற்கு இது ஒரு சிறந்த
மென்பொருளாகும். ஆனால் மற்றைய அன்ரிவைரஸ் மென்பொருள்கள் போலல்லாது,
கண்டுபிடிக்கப்படும் வைரஸ்களை நீங்கள்தான் நீக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
இதுவும் ஒரு இலவசமான அன்ரிவைரஸ் மற்றும் அன்ரிஸ்பைவெயர் மென்பொருளாகும்.
மல்வெயர்களிலிருந்து உங்களை பாதுகாப்பதில் இது ஏவிஜி இற்கு நிகரானது.
அத்தோடு உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுவதும் மிக இலகுவானது.
Comments
Post a Comment