கீரைகள் பற்றி


நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும் உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

"முருங்கைக்கீரை முட்ட வாயு ; ஆத்திக்கீரை அண்ட வாயு" என்று கூறி சிலர் கீரைகளை உணவாக சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். என்ன சொல்வது இவர்களின் அறியாமையை. 'வாயு' என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.

நமது நாட்டு அறிய பொக்கிஷமான கீரை -இலைகளில் உள்ள வைட்டமின் கணிசத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்:

வைட்டமின் ' ஏ ' மகிமையை தவிர இன்னும் பிற மகிமைகளும் கீரைகளுக்கு உள்ளன. போலிக் ஆசிட் (FOLIC ACID) என்ற வைட்டமின் ' பி 'யின் ஒரு ரகம் கீரைகளில் - இலைகளில் ஏராளமாய் உண்டு. இந்த வகை ரகத்தால் தான் ரத்தம் சோகைப்படாமல் காப்பாற்றப்படுகிறது.



வைட்டமின் 'பி' & 'சி ' பற்றி சுருக்கமாக பார்க்கலாம் .

முருங்கைகீரையில் அரிசிக்கு மும்மடங்கும். வெந்தயக்கீரையில் அரிசிக்கு இருமடங்கும், பசலைக்கீரையில் அரிசிக்கு மும்மடங்கும் வைட்டமின் 'பி' இருக்கிறது.ஆரஞ்சில் வைட்டமின் ' சி ' 60 யூனிட் என்று அளவுகோல் வைத்துக்கொண்டால் கீரை- இலைகளில் கணிசத்தைக் காணலாம்.

கீரைகளில் புரதக் கணிசமும் அதிகமாகவே உள்ளது. அன்றாட உணவில் கீரையினை மசியலாகவோ துகையலாகவோ அல்லது பொரியலாகவோ சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரையினை தினசரி உணவில் சேர்த்தக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கிவிடும். 

நன்றி:- KKYMirror நிருபர் Mohamed Afrith
Photo
Photo

Comments