தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது.
மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால், Hard Disk அதிகமான இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இந்நிலையில் திடீரென Hard Disk இயங்காமல் போனால், இந்த புகைப்படங்கள் கிடைக்காது.
இதற்கு மாற்றுதீர்வாக புகைப்படங்களை Cloud Computing முறையில் சேமிக்க பல்வேறு இணையத்தளங்கள் செயல்படுகின்றன.
குறித்த இணையத்தளத்தில் நுழைந்த உடன், உங்களுக்கான கணக்கு ஒன்றை தொடங்கவும்.
உடனே லொக்கின் செய்தவுடன், Start Backing Up Your Photographs என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், Setup File தரவிறக்கம் செய்யப்படும்.
இதனை இயக்கி, படங்களை ஒருங்கிணைக்கும் Picturelife Sync அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இந்த தளத்தின் மூலம் இலவசமாக 5 ஜிபி வரையிலான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.
அனைத்தும் முடிந்தவுடன், உங்களது புகைப்படங்களை ஆல்பங்களாக பிரிக்கலாம்.
எந்நிலையில் நீங்களும் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை மீண்டும் எடுத்து பார்க்க முடியும்.
Comments
Post a Comment