ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அவதாரம். 9.7 அங்குல திரைகொண்ட புதிய iPadஅறிமுகம்

ஆப்பிள் சென்ற அக்டோபர் 22ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தன் கருத்தரங்கில், அடுத்து வர இருக்கும் ஐ-பேட் சாதனம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது ஐ பேட் வரிசையில் ஐந்தாவதாக அமையும். இதன் திரை 9.7 அங்குல அகலம் கொண்டிருக்கும். இதன் தடிமன் முன்பு இருந்ததைக் காட்டிலும் குறைவாக 7.5 மிமீ (0.29 அங்குலம்) இருக்கும். முந்தைய ஐபேடின் தடிமன் 9.4 மிமீ (0.37 அங்குலம்) இதன் எடை 454 கிராம்.
இதற்கு முன்பு வந்த ஐ பேடின் எடை 653 கிராம். உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஹார்ட்வேர் பகுதிகளின் மொத்த எடையினை, ஆப்பிள் 226 கிராம் அளவில் குறைத்துள்ளது.இதன் உள்ளே தரப்பட்டிருக்கும் ஏ7 (A7) சிப், முந்தைய ஐபேட் 4ஐக் காட்டிலும், எட்டு மடங்கு கூடுதலான வேகத்தில் இயங்குகிறது.

இதனுடன் தரப்பட்டிருக்கும் எம்7 (M7) கிராபிக்ஸ் கோ ப்ராசசர், முந்தைய ஐபேட் இயக்கத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக கிராபிக்ஸ் ஜாலங்களைத் தருகிறது. மொத்த செயல்பாட்டில் முந்தைய ஐபேடைக் காட்டிலும் 72 மடங்கு வேகமாக, இந்த புதிய ஐபேட் 5 செயல்படுவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இதன் இன்னொரு சிறப்பு இதில் ரெடினா டிஸ்பிளே கிடைப்பதாகும்.
இதன் கேமரா, 5 எம்.பி. திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு கேமரா, வீடியோ அழைப்புகளுக்கென தரப்பட்டுள்ளது. தொடர்ந்து பத்து மணி நேரம் செயல்படும் திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1 முதல் இது கிடைக்க இருக்கிறது. 16 ஜிபி திறனுடன், வை – பி செயல்பாடு கொண்ட ஐபேட் 499 டாலருக்கும், செல்லுலர் மாடல் ஐபேட் 629 டாலருக்கும் கிடைக்கும்.
சென்ற ஆண்டு வெளியான ஐ-பேட் மினி சாதனத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, ஆப்பிள் வெளியிடுகிறது. இதில் புதியதாக ரெடினா டிஸ்பிளே (2048 x 1536 பிக்ஸெல்கள் கொண்ட ரெசல்யூசன்) இணைக்கப்படுகிறது. இது 7.9 அங்குல அகலத்திரை கொண்ட டேப்ளட் ஆக உள்ளது. இதன் விலை 399 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

Comments